திருமணம் தாண்டிய தகாத உறவில் முதலிடத்தை பிடித்த தமிழகத்தை சேர்ந்த நகரம்? அதிர்ச்சி ரிப்போர்ட்!
Author: Udayachandran RadhaKrishnan26 July 2025, 2:05 pm
நவீன உலகத்தில் கள்ளக்காதல் சம்பவங்கள் பெருகி வருகிறது. டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்றைய காலத்தில், நட்பு ஏற்படுத்துவது, தகாத உறவு, ஆபாசத்துக்கு என அனைத்திற்கு செயலிகள் வந்துவிட்டன.
டெக்னாலஜி வளர வளவர இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தினமும் கள்ளக்காதல் சம்பவங்கள், திருமணம் தாண்டிய தகாத உறவு, கள்ளக்காதலால் கொலை, தற்கொலை என வராத செய்திகளே இல்லை.
உலகத்தில் மூளை முடுக்கெல்லாம் இந்த சம்பவங்கள் நடந்து வருகின்றனர். இந்த நிலையில் Ashley Madison என்ற செயலி இந்தியாவில் கள்ள உறவு அதிகரிதது வருவது குறித்து வெளியிட்ட பட்டியல்தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
திருமணத்தை மீறிய கள்ள உளவு குறித்த முக்கிய ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. அதில் முதலிடத்தில் இருப்பது தமிழ்நாட்டை சேர்ந்த காஞ்சிபுரம் நகரம் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
2024ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் 17வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது முதலிடத்தில் பிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் முக்கிய தொழில் நகரமாகவும், பக்தி நகரமாகவும் பார்க்கப்படுகிறது.

அதிகளவு தொழிற்சாலைகள் உள்ளதால் வெளி மாவட்ட, மாநில மக்கள் அதிகம் பேர் தங்கி பணிபுரிகின்றனர். அதே சமயம், பக்தி நகரம் என்பதால் பெரும்பாலான பக்தர்கள் இந்தியாவில் இருந்து இங்கு வந்து கடவுளை தரிசனம் செய்து வருகின்றனர்.
வரலாற்று பெருமை கொண்ட காஞ்சிபுரம் மாவட்டம் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள நிலையில், திருமணத்தை தாண்டிய கள்ள உறவில் முதலிடத்தில் இருப்பது அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து 2வது இடத்தில், மத்திய டெல்லி, குர்கான், கௌதம புத்தா நகர், தென்மேற்கு டெல்லி, டெகராடன், புனே, பெங்களூரு, கல்கத்தா போன்ற நகரங்கள் இடம்பிடித்துள்ளது.
