வாலிபருக்கு போலி விசா அளித்து மூன்று லட்ச ரூபாய் மோசடி.! ஓராண்டாக தலைமறைவாக இருந்த இளைஞர் கைது

27 November 2020, 10:22 pm
Quick Share

கன்னியாகுமரி: நெல்லை மாவட்ட பட்டதாரி வாலிபருக்கு போலி விசா அளித்து மூன்று லட்ச ரூபாய் மோசடி செய்து ஓராண்டாக தலைமறைவாக இருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் ராஜவினு.  இவர் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி டிராவல்ஏஜென்சி நடத்தி வந்தார்.  இத்தகவலை அறிந்து நெல்லை மாவட்டத்தை சேர்ந்த  டிப்ளமோ பட்டதாரியான அசோக்குமார், பி.காம்  பட்டதாரியான பாலமுருகன் ஆகியோர் ராஜவினுவை சந்தித்து  வெளிநாடு வேலை  குறித்து விசாரித்துள்ளனர்.

பின்னர் அவர்களுக்கு வெளிநாட்டில்  வேலை ஏற்பாடு செய்துள்ளதாக கூறிய  ராஜவினு இருவரிடமிருந்தும்  தலா ஒரு லட்சத்து  அறுபது ஆயிரம் ரூபாய் பெற்று கொண்ட பின்பு விசா அளித்துள்ளார்.   அதை பெற்று கொண்டு வெளிநாடு செல்ல இருவரும் தயாரான நிலையில், தங்கள் கையில்  கிடைத்த விசா போலி  என்பது தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த இருவரும் 2019 ஆம் ஆண்டு  கன்னியாகுமரி மாவட்ட குற்ற  பிரிவு போலீசாரிடம்  புகார் அளித்தனர். 

அதன்படி, வழக்கு பதிவு செய்யப்பட்டு ராஜவினுவை போலீசார் தேடி வந்தனர். கடந்த  ஓராண்டாக தலைமறைவாக இருந்த ராஜவினு இன்று குலசேகரத்தில் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து விரைந்து சென்ற குற்றபிரிவு போலீசார்  அவரை கைது செய்து  சிறையில் அடைத்தனர்.

Views: - 11

0

0