முதலமைச்சர் ஸ்டாலினை காண 80 அடி உயர செல்போன் டவரில் ஏறி அட்டகாசம் : இறங்க மறுத்த இளைஞரால் விழிபிதுங்கிய போலீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2022, 12:56 pm

திண்டுக்கல் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்ப்பதற்காக 70 அடி உயர செல்போன் டவர் மீது ஏறிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக நேற்று தேனி வருகை தந்தார் இன்று காலை தேனியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி விட்டு அங்கிருந்து திண்டுக்கல்லுக்கு வருகிறார்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட எல்லையான பரசுராமபுரம் பகுதியில் இருந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பல்வேறு இடங்களில் திமுக கட்சியினர் தமிழக முதல்வரை வரவேற்க சாலையோரங்களில் ஆங்காங்கே திமுக கட்சியினர் பொதுமக்களுடன் வெயிலில் காத்திருக்கின்றனர்.

இதையடுத்து தமிழக முதல்வரை பார்ப்பதற்காக வத்தலகுண்டு அருகே உள்ள கட்டக்காமன்பட்டி பகுதியில் 80 அடி உயரம் உள்ள செல்போன் டவர் மீது விராலிபட்டி பகுதியைச் சேர்ந்த குருசங்கர் என்ற இளைஞர் ஏறியுள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் 80 அடி உயரமுள்ள செல்போன் டவர் மீது ஏறினார். இதையடுத்து பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இளைஞர் கீழே வராததால் பொதுமக்கள் அவரை கீழே இறங்க வலியுறுத்தி வருகின்றனர். முதல்வர் வருகையால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இளைஞர் செல்போன் டவர் மீது ஏறியுள்ளது அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!