தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிப்பா ? முதல்வர் இன்று ஆலோசனை..!
29 August 2020, 8:51 amதமிழகத்தில் பொது முடக்கம் முடிவடையவுள்ள நிலையில், முதலமைச்சர் பழனிசாமி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவிய கொரோனா தொற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் முடங்கி உள்ளது. இந்தியாவிலும் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீபோல் பரவி வருகிறது.
இந்த சூழலில் தமிழகத்தில் வரும் 31-ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடியவுள்ளது. இதனால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
இதனை தொடர்ந்து, பிற்பகல் மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இ.பாஸ் முறையை ரத்து செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், அதிகாரிகளுடனான இந்த கூட்டத்தில் இது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்திற்கான தளர்வுகள் கனிசமாக விலக்கப்பட்டு வரும் சூழலில், அன்லாக் 4.0 விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.