பாசனத்திற்காக 20ம் தேதி முதல் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு

17 September 2020, 4:52 pm
amaravathi dam - updatenews360
Quick Share

சென்னை : பாசனத்திற்காக அமராவதி அணையில் இருந்து வரும் 20ம் தேதி முதல் தண்ணீரை திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

திருப்பூர்‌ மாவட்டம்‌, அமராவதி அணையிலிருந்து அமராவதி பழைய மற்றும்‌ புதிய பாசன பகுதிகளுக்கு தண்ணீர்‌ திறந்து விடுமாறு திருப்பூர்‌ மற்றும்‌ கரூர்‌ மாவட்டங்களைச்‌ சார்ந்த நீரினைப்‌ பயன்படுத்துவோர்‌ சங்க பிரதிநிதிகள்‌ உள்ளிட்ட வேளாண்‌ பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள்‌ வந்துள்ளன.

வேளாண்‌ பெருங்குடி மக்களின்‌ வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர்‌ மற்றும்‌ கரூர்‌ மாவட்டங்களைச்‌ சார்ந்த 16 அமராவதி பழைய வாய்க்கால்‌ பாசனப்‌ பகுதி நிலங்களில்‌ குறுவை சாகுபடிக்காக அமராவதி ஆற்று மதகு வழியாக 6048.00 மி.கன.அடிக்கு மிகாமலும்‌, திருப்பூர்‌ மாவட்டத்திலுள்ள புதிய பாசனப்‌ பகுதிகளில்‌ குறுவை சகுபடிக்காக அமராவதி பிரதானக்‌ கால்வாய்‌ வழியாக 266100 மி.கன.அடிக்கு மிகாமலும்‌ ஆக மொத்தம்‌ 8709.00 மி.க.துடிக்கு மிகாமல்‌ வரும் 20ம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்.,2ம் தேதி வரை அமராவதி அணையிலிருந்து தண்ணீர்‌ திறந்து விட நான்‌ ஆணையிட்டுள்ளேன்‌.

இதனால்‌ திருப்பூர்‌ மற்றும்‌ கரூர்‌ மாவட்டங்களில்‌ உள்ள 51,803 ஏக்கர்‌ நிலங்கள்‌ பாசன வசதி பெறும்‌ என்பதை மகிழ்ச்சியுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. விவசாயப்‌ பெருமக்கள்‌ நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர்‌ மேலாண்மை மேற்கொண்டு உயர்‌ மகசூல்‌ பெற வேண்டுமாய்‌ அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌, எனக் குறிப்பிட்டுள்ளார்