பாசனத்திற்காக ஆழியாறு அணையில் இருந்து 6ம் தேதி முதல் நீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

2 November 2020, 4:21 pm
aliyar dam water - updatenews360
Quick Share

சென்னை : பாசனத்திற்காக ஆழியாறு அணையில் இருந்து வரும் 6ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, ஆனைமலை வட்டம்‌, ஆழியாறு பழைய ஆயக்கட்டு இரண்டாம்போக பாசனத்திற்கு ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர்‌ திறந்துவிடக்‌ கோரி ஆனைமலை வட்டார ஆழியாறு பழைய ஆயக்கட்டு விவசாயிகள்‌ நலச்‌ சங்கம்‌ உள்ளிட்ட வேளாண்‌ பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள்‌ வந்துள்ளன.

வேளாண்‌ பெருங்குடி மக்களின்‌ வேண்டுகோளினை ஏற்று, கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, ஆனைமலை வட்டம்‌, ஆழியாறு பழைய ஐந்து வாய்க்கால்களின்‌ மூலம்‌ பாசனம்‌ பெறும்‌ நிலங்களின்‌ இரண்டாம்போக பாசனத்திற்கு 6.11.2020 முதல்‌ 15.4.2021 முடிய 160 நாட்களுக்கு, ஆழியாறு அணையிலிருந்து 1,137 மில்லியன்‌ கன அடிக்கு மிகாமல்‌ தண்ணீர்‌ திறந்துவிட நான்‌ ஆணையிட்டுள்ளேன்‌.

இதனால்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌ ஆனைமலை வட்டத்தில்‌ உள்ள 6,400 ஏக்கர்‌ நிலங்கள்‌ பாசன வசதி பெறும்‌ என்பதை மகிழ்ச்சியுடன்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌. விவசாயப்‌ பெருமக்கள்‌ நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர்‌ மேலாண்மை மேற்கொண்டு உயர்‌ மகசூல்‌ பெற வேண்டுமாய்‌ அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌, எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 20

0

0

1 thought on “பாசனத்திற்காக ஆழியாறு அணையில் இருந்து 6ம் தேதி முதல் நீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

Comments are closed.