நிவர் புயல்…. மக்களை பாதுகாப்பதில் கவனமா இருங்க… மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

23 November 2020, 4:07 pm
CM Wish- Updatenews360
Quick Share

நிவர் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது சென்னையில் இருந்து 630 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதனால், உருவாகும் நிவர் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்த உள்ளது. எனவே, இந்த புயலால் பாதிப்புகள் ஏற்படக் கூடிய மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

nivar - updatenews360

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசியதாவது :- நிவர் புயலையொட்டி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

rb udhayakumar - updatenews360

அனைத்து ஏரிகள், நீர்நிலைகளில் கள ஆய்வு நடத்தி, கரை உடைப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அரசு முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 36 வருவாய் மாவட்டங்களில் தனி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு, முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Views: - 0

0

0

1 thought on “நிவர் புயல்…. மக்களை பாதுகாப்பதில் கவனமா இருங்க… மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

Comments are closed.