அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார் முதலமைச்சர் பழனிசாமி!!

19 August 2020, 4:55 pm
EPS - updatenews360
Quick Share

சென்னை : கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நோய் தொற்றுக்கு மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த சூலில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சரோடு அவரது மனைவி, மகளுக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து, 3 பேரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் விஜயபாஸ்கரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். மேலும், அமைச்சரும், அவரின் மனைவி மற்றும் மகளும் பூரண குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறினார்.

Views: - 33

0

0