இதயங்களில் நிரந்தரமாக ஆட்சி செய்யும் தன்னிகரில்லா மக்கள் தலைவி : எடப்பாடியார் புகழாரம்..!!

5 December 2020, 11:02 am
eps - jayalalitha - updatenews360
Quick Share

சென்னை : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் மூலம் மரியாதை செலுத்தியுள்ளார்.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு செப்டம்பர் 23ம் தேதி சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 74 நாட்கள் தொடர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அதே ஆண்டில் டிசம்பர் 5ம் தேதி காலமானார்.

அதன்படி, இன்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் பலரும் நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் கருத்து பகிர்ந்துள்ளார்.

அவர் விடுத்த பதிவில், “அளவில்லா அன்பு, ஆகச்சிறந்த நிர்வாகத்திறன், தனித்துவ ஆளுமை ஆகியவற்றால் தாய்த்தமிழ் மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் கோலோச்சி, எங்கள் இதயங்களில் நிரந்தரமாக ஆட்சி செய்யும் எங்களின் தன்னிகரில்லா மக்கள் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களை நினைவு கூர்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 7

0

0