சிறுபான்மையினருக்கு அரணாக அதிமுக உள்ளது… ராமநாதபுரம் விழாவில் முதல்வர் உரை!

1 March 2020, 1:10 pm
Edappady 01 updatenews360
Quick Share

சிறுபான்மையினருக்கு அரணாக அதிமுக அரசு விளங்குகிறது  என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் 22 ஏக்கர் பரப்பளவில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட உள்ளது. இதில் மருத்துவக்கல்லூரி கட்டிடம் ரூ.125.01 கோடியிலும், மருத்துவமனை கட்டிடம் ரூ.150.01 கோடியிலும், குடியிருப்பு கட்டிடம் ரூ.69.98 கோடியிலும் ஆக மொத்தம் ரூ.345 கோடியில் கட்டப்படுகின்றன.

Ramnad 01 updatenews360

புதிய மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா, ராமநாதபுரத்தில் இன்று காலை நடைபெற்றது.  அடிக்கல் நாட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அறிவித்த திட்டங்களை அரசு செயல்படுத்தி உள்ளது. இம்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மருத்துவக்கல்லூரிக்கு தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம் 1,650 மருத்துவ மாணவர் இடங்கள் கூடுதலாக பெறப்பட்டுள்ளன

மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க கச்சத்தீவை மீட்க தொடர்ந்து சட்டப்போராட்டத்தை அதிமுக அரசு நடத்தி வருகிறது.  ஏழை எளிய மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த, பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது.

அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு அரணாக விளங்குகிறது. எனவே,   வதந்திகளை நம்பாமல் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமி பேசினார்.

இவ்விழாவில், மத்திய சுகாதாரத்துறை அமைசர் ஹர்ஷவர்தன், துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வம், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.