திடீரென கமலாலயம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்… அரைமணி நேரம் நடந்த விசிட்… திடீர் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
22 February 2023, 12:56 pm

2 நாள் பயணமாக திருவாரூர் சென்றுள்ள முதலமைச்சர் அரைமணிநேரம் கமலாலயத்தை பார்வையிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இரண்டு நாள் பயணமாக திருவாரூர் வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் வீட்டில் ஒய்வு எடுத்துவிட்டு, மாலை 6 மணிக்கு காட்டூரில் கட்டப்பட்டு வரும் மறைந்த திமுக தலைவர் கலைஞரின் நினைவரங்க கட்டிடத்தை பார்வையிட்டார்.

தொடர்ந்து, தஞ்சை சாலையில் வட்டாட்சியர் அலுவலகத்தை அருகாமையில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் நெல் சேமிப்பு கிடங்கில் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து, திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்திற்கு சொந்தமான மேல ராஜ கோபுர வாயிலையொட்டி அமைந்துள்ள பிரமாண்ட குளமான கமலாலயத்திற்கு சென்றார்.

பின்னர், படகின் மூலம் குளத்தின் நடுவே உள்ள நாகதோஷம் உள்ளவர்கள் வணங்க கூடிய ஸ்ரீநாகநாதசுவாமி ஆலயத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரைமணிநேரம் ஆலயத்தை பார்வையிட்டார்.

அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு,மாவட்ட்ஆட்சியர் சாருஸ்ரீ ஆகியோரும் இருந்தனர். பின்னர் குளத்தின் நடுவே உள்ள கோவிலில் இருந்து மீண்டும் படகு மூலம் கரைக்கு வந்து காரில் சன்னதி தெரு வீட்டிற்கு சென்றார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?