சென்னை மாநகராட்சி ஊழியர்கள் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் : முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!!

11 June 2021, 11:41 am
cm stalin- updatenews360
Quick Share

சென்னை அயனாவரத்தில் தூய்மை பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

சென்னை அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் தூய்மை பணியாளர் உள்ளிட்ட மாநகராட்சி பணியாளர்களுக்கு இலவச மருத்துவ உபகரணங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நீராவி பிடிக்கும் இயந்திரம் , வைட்டமின் மாத்திரைகள், முழு முகக்வசம், கபசுர குடிநீர் பொடி, அரிசி பைகளை முதல்வர் வழங்கினார்.

பின்பு , மறைந்த திமுக பிரமுகர் ஜெய்சங்கர் அவரது இல்லத்திற்கு சென்று துக்கம் விசாரித்தார். அடுத்த படியாக , எஸ்.பி.ஐ காலணியில் உள்ள ஜமாலியா குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் புதியதாக கட்ட இருக்கும் 474 குடியிருப்புகளை பார்வையிட்டார்.

பின்பு , பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள சந்திரா பாய் பகாரியா ஜெயின் பள்ளியில் 180 ஆசிரியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மு.க ஸ்டாலின் வழங்கினார். ஜவகர் நகர் நகரில் உள்ள கொளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் 210 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் , ஜி.கே.எம் காலணி 24 தெருவில் உள்ள முத்துமாரி அம்மன் கோவில் குளத்தை சிரமைக்கும் பணியை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பார்வையிட்டார்.

Views: - 78

0

0

Leave a Reply