கொரோனா சூழலில் முதலமைச்சருடன் சேகர் ரெட்டி திடீர் சந்திப்பு : தலைமை செயலகத்தில் பரபரப்பு..!!!

18 May 2021, 11:22 am
sekar reddy - stalin - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சர் நிவாரண பணிகளுக்கு ரூ.1 கோடி நிதியுதவியை சேகர் ரெட்டி வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சராசரி பாதிப்பு 33 ஆயிரத்தை கடந்து விட்டது. மேலும், ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் படுக்கை வசதிகள் இல்லாமல், கொரோனா நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியையும் தமிழக அரசு எதிர்நோக்கியிருப்பதால், பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, பல்வேறு தரப்பினர் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முடிந்த அளவிலான உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் JSRIDPL நிறுவனத்தின் தலைவர் சேகர் ரெட்டி முதலமைச்சர் முக ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். இந்த சந்திப்பின் போது சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இருந்தார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சேகர் ரெட்டியின் வீட்டில் ரூ.34 கோடிக்கு ரூ. 2,000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 204

0

0