முதலமைச்சர் வருகையின் போது மின்விளக்கு எரியாதது ஏன்..? கொதித்தெழுந்த திமுகவினர்… ஒப்பந்ததாரரை கை காட்டிய மின்சாரத்துறை; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
15 November 2022, 1:28 pm

தமிழக முதல்வர் விருத்தாச்சலம் வருகை தந்த போது, நெடுஞ்சாலையில், மின்விளக்குகள் எரியாமல், இருப்பதற்கு நாங்கள் காரணம் இல்லை என மின்துறை அதிகாரிகள் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வீடியோ மற்றும் ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால், ஏற்பட்டுள்ள பயிர் சேதம், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆய்வுக்குப் பின்பு, சென்னை செல்வதற்காக விருத்தாச்சலம் வழியாக வருகை தந்தார். இதனால் விருத்தாச்சலம் வழியாக முதல்வர் ஸ்டாலின் வருவதை அறிந்த திமுக தொண்டர்கள், மதியம் 5 மணியிலிருந்து பொன்னேரி புறவழிச் சாலையில் காத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது முதல்வர் ஸ்டாலின் வருவதற்கு தாமதமானதால், விருத்தாச்சலம் நகரத்துக்குள் வருகின்ற நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் எரியாமல் இருப்பதைக் கண்ட திமுக தொண்டர்கள், மின்வாரிய துறை அதிகாரியிடம், முறையிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அலறடித்துக் கொண்டு வந்த மின்வாரியத் துறை அதிகாரிகள், பொன்னேரி, பூதாம்பூர் பகுதியில் செல்லும் நெடுஞ்சாலையில், மின் விளக்குகளுக்கு செல்லக்கூடிய மின்சாரம் சரியாக உள்ளதா என? ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

ஆய்வு மேற்கொண்டதில் மின்வாரியதுறை அதிகாரிகள், மீது எந்தவித தவறும் இல்லை என்றும், மின்சாரம் வழங்குவது மட்டும் தான், மின்வாரியதுறை அதிகாரிகளின் கடமை என்றும், நெடுஞ்சாலைத் துறையில் உள்ள மின்விளக்குகள் எரியாமல் இருப்பதற்கு, ஒப்பந்ததாரர்கள் தான் காரணம் என ஆடியோ மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக முதல்வர் வருகின்ற போதே, நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் எரியாமல் இருப்பதை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் என யாரும் கண்டுகொள்ளவில்லை என்றால், சாமானிய பொதுமக்களின் பிரச்சினை எப்படி தீர்ப்பார்கள் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழக முதல்வர் வருகின்ற போது, நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட, மின் விளக்குகள் எரியாமல், இருந்ததற்கு, ‘நாங்கள் பொறுப்பில்லை’ என மின்வாரிய துறை அதிகாரிகள் பதிவிட்ட வீடியோ மற்றும் ஆடியோ சமூக வலைதளத்தில் வெளியானதால் பரபரப்பு ஏற்படுத்தியது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!