தென்பென்னை ஆற்றில் அதிகரித்துள்ள நீர்வரத்து: வெள்ள அபாய எச்சரிக்கை..!!

24 October 2020, 5:43 pm
thenpennai - uipdatenews360
Quick Share

தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஓசூர்: கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு தொடர் கனமழை பெய்தது. இதன் காரணமாக தமிழகத்திற்கு வரும் தென்பெண்ணை ஆற்றின் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

நீர்வரத்து அதிகரிப்பால் ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வருவாய்த்துறையினர் தண்டோரா மூலம் அறிவித்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீர்வரத்து நேற்று வினாடிக்கு 880 கன அடியாக இருந்தது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி அணையின் நீர்வரத்து மேலும் 160 கன அடி அதிகரித்து தற்போது வினாடிக்கு 1,040 கன அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் தற்போது 39.96 அடி நீர் இருப்பு உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அதே அளவான 1,040 கன அடி நீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

Views: - 15

0

0