கோவையில் தொடர்ந்து 2வது நாளாக பெய்யும் மழை.. அதிகாலை முதலே பெய்யும் சாரல் மழையால் பொதுமக்கள் அவதி

Author: Babu Lakshmanan
14 December 2022, 9:00 am

கோவையில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்த நிலையில் மாலை தொடர்ச்சியாக மூன்று மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்து வருகிறது.

தொடர் மழையால் பொது மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு வங்கக் கடலில் உருவாகிய மாண்டஸ் புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாண்டஸ் புயல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு புதுச்சேரிக்கும், சென்னைக்கும் இடையை கரையை கடந்தது.

இதனைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. தொடா் மழையால் கோவையில் குளிரின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டது. இதை தொடர்ந்து இன்று காலை பெய்த மழையால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லுவோர் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது.

coimbatore rain - updatenews360

மேலும் கோவையில் காலையில் கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதனால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர்.

coimbatore rain - updatenews360

இந்நிலையில், கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் தற்போது வரை தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டவுன்ஹால் உக்கடம், காந்திபுரம், வடவள்ளி, சிங்காநல்லூர் கவுண்டம்பாளையம் போன்ற மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் கனமழை பெய்தது.

coimbatore rain - updatenews360

இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்று அதிகாலை முதலே மிதமான மழை பெய்து வருவதால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிக்கு செல்வோர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!