கோவையில் அதிமுகவினர் கொண்டாட்டம் : பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சி!!

Author: Udayachandran
7 October 2020, 11:45 am
CBE Admk Celeb- updatenews360
Quick Share

கோவை : முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கோவையில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்று நீண்ட நாட்களாக ஆலோசிக்கப்பட்டு வந்தது.

இந்த சூழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இதற்கான அறிவிப்பை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். அதன் ஒரு பகுதியாக கோவை ஓசூர் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சித் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Views: - 42

0

0