கோவை கார் வெடிப்பு சம்பவம் ; கைதான அப்சர்கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு

Author: Babu Lakshmanan
28 October 2022, 9:07 am

கோவையில் கார் வெடித்த வழக்கில் ஆறாவதாக கைதான அப்சர்கான் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கோவையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கார் வெடிப்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உபா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் அந்த ஐந்து பேரையும் மூன்று நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் அதே வழக்கில் ஆறாவதாக கைது செய்யப்பட்ட அப்சர்கான் என்பவரை போலீசார், கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக போலீசார் அழைத்து வந்தனர்.அதனை தொடர்ந்து ஜெ.எம்.5 நீதிபதி சந்தோஷ் முன்பாக ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ் அப்சல்கானை நவம்பர் 10ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி சந்தோஷ் உத்தரவிட்டார்.

அதையடுத்து, போலீசார் அப்சர்கானை கோவை மத்திய சிறைக்கு அழைத்துச்சென்றனர். மேலும், இந்த வழக்கானது தேசிய புலனாய்வு அமைப்பான NIAக்கு முழுமையாக மாற்றப்படுகிறது. மேலும் தமிழக போலீசாரிடம் இருந்து இதுவரை இந்த வழக்கு தொடர்பான ஆவனங்களை NIA அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் வேளையில் தமிழக காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாக கோவையில் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?