கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் திடீர் திருப்பம்… மேலும் ஒருவர் கைது… என்ஐஏ அதிகாரிகள் அதிரடி..!!

Author: Babu Lakshmanan
2 August 2023, 8:50 am

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

கோவையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முகமது இத்ரீஸ் என்ற மேலும் ஒருவரை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அவரை சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆஜர்படுத்துகின்றனர்.

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக விளங்கும் ஜமிஷா மூபினின் நெருங்கிய நண்பரான முகமது இத்ரிஸ் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் இருந்தவர். குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலங்களின் அடிப்படையில் முகமது இதரீஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?