தமிழர்களுக்கு ஏன்டா துரோகம் செய்யறீங்க? திமுக மற்றும் கூட்டணி கட்சியை விளாசிய அர்ஜூன் சம்பத் பேச்சால் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan1 ஆகஸ்ட் 2023, 10:01 மணி
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்து சனாதன தர்மம் குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கு மற்றும் பொதுக்கூட்டத்தில் நடைபெறுகிறது.
இதுகுறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது:- மணிப்பூரில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பிரிவினையை தொடர வேண்டும் மீண்டும் மீண்டும் தூண்ட வேண்டும் அதை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என கனிமொழியும் திருமாவளவனும் அங்கு சென்று கலவரத்தை தூண்ட வேண்டும் என்பதற்காகவும் ஈடுபட்டு வருவதாகவும் இலங்கைத் தமிழருக்கு தான் துரோகம் செய்தீர்கள்,தமிழர்களுக்கு ஏண்டா துரோகம் செய்கிறீர்கள் எனவும் நீங்கள் ராஜபக்சேவுடன் கை கோர்த்தவர்கள் தானே என்று பழனியில் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திமுக அரசு மணீப்பூர் குக்கி இன மக்களின் மாணவர்களை வைத்து போராட்டம் ஏன் செய்து வருகிறது என இந் து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதை பயன்படுத்தி திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பிரதமர் மோடி ,அமித்ஷாவை ராமர் ,லட்சுமன் போல் சித்தரிக்கப்பட்டு நடுவில் சீதையை நிர்வாணமாக நிற்பது போல் பேனர் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் இதேபோல் இஸ்லாமிய கடவுள் மீது பதிவு செய்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்றும் இதன் மீது என்ன நடவடிக்கை தமிழக அரசு எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமியின் மருமகளும் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரின் மனைவி மெர்சி நரேந்திர மோடியை கொலை செய்ய முயற்சித்து திட்டம் தீட்டிய பாதிரியாரின் அஸ்தியை அதற்கு பூஜை செய்தார்கள். இனி பாதிரியார்களை பாதுகாப்போம் என கூறியுள்ளது திமுகவில் இதுபோன்ற ஆட்கள்தான் ஊடுருவி இருக்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டை தெரிவித்தார்.
இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக கிறிஸ்தவ சர்ச்சுகள் பாதிரியார்கள் திட்டமிட்டு மாவோஸ்ட்டுகளோடு சேர்ந்து கொண்டு திமுகவை பயன்படுத்தி திமுக ஆட்சியை பயன்படுத்தியும் தமிழகத்தில் மணிப்பூர் விஷயத்தில் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் ஏன் ஹிந்து மாணவர்களை எதற்காக அழைத்துச் செல்கிறார்கள்.
தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை என்மண் என் மக்கள் என்ற பாதையாத்திரை ஐந்து நாட்களில் ஏராளமான வரவேற்பு மக்களிடம் இருந்து கிடைத்துள்ளதாகவும் ,அனைத்து தவறுகளையும் திமுக தான், பாவம் செய்த கட்சி திமுக , மீனவர்களை காட்டிக் கொடுத்த பாவிகள் யார் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை திமுக செய்த பாவங்களுக்கு சரி செய்து கொண்டிருக்கிறார்,
பனைமரம் ஏறும் தொழிலாளர்கள் குறித்த பிரச்சினைகளை கேட்டு வருகிறார். அதேபோல பாதயாத்திரை தூங்கும் முன் டி.எம்.கே பைல்ஸ் இரண்டை வெளியிட்டு விட்டு இந்த யாத்திரை துவங்கியிருக்கிறார். லஞ்சம் ஊழல் எதிராக யாத்திரை இந்த யாத்திரை தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை கொண்டு வரும் எனவும் அதனை வழி சேர்க்கும் விதமாக இந்து மக்கள் கட்சி வரவேற்பு ஆதரவை அளிக்கும் என்றும் தெரிவித்தார்.
பழனி கோவிலில் சேவல் கோழிகளை கறிக்கடை போல் கிலோ கணக்கில் விலை வைத்து விற்பது தவறு என்றும் இது பக்தர் மனதை புண்படுத்துகிறது என்றும் திமுகவிற்கு சாதகமானவர்கள் நாத்திக, கம்யூனிஸ சிந்தனையாளர்கள் அறநிலைத்துறை ஊடுருவி விட்டார்கள் ,கிரிப்டோ கிறிஸ்தவர்களும் ஊடிருவி விட்டார்கள்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது , எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது தோல்வி அடையும் என்று எதிர்க்கட்சிகளுக்கே தெரிந்தும் செய்து வருகிறார்கள் என்றும் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
மணிப்பூர் சம்பந்தமாக விவாதிக்க யாரும் தயாராக இல்லை இவர்களுடைய குட்டு வெளிப்பட்டு விடும் என்றும் விவாதத்துக்கு தயாராக இல்லாமல் நாடாளுமன்றத்தை முடக்க வேண்டும் என்றும் மக்கள் பணத்தை வீண்டிக்க வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் எண்ணமென்றும் கம்யூனிஸ்ட் காரர்கள் நாடாளுமன்ற உறுப்பினரே கிடையாது என்றும் வெளிநாட்டில் இருந்து தூண்டி விடுபவர்களுக்கெல்லாம் இந்த மாதிரியான திமுக போன்ற கட்சியை டூல் கிட்டாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலையின் என்மன் என் மக்கள் யாத்திரையின் திசை திருப்புவதற்காகவே நடிகர் ரஜினியின் ஜெயிலர் பட டீசரை வெளியிட்டு உள்ளார்கள் என்றும் அதேபோல் மணிப்பூர் விவகாரத்தை தூண்டி விட்டார்கள் என்றும் திமுக இங்கிருக்கும் பெண்கள் மீது காப்பாற்ற முடியாமல் இருக்கும் நிலையில் சொந்தக் கட்சி பெண்ணை கொடுத்த புகார் குறித்தும் இடுப்பை கிள்ளிய புகாரின் நடவடிக்கை எடுக்க முடியாத திமுக,
மணிப்பூர் பெண்களுக்காக அப்புறம் போராடலாம் என்றும் எனக்காக முதலில் போராடுங்கள் என்று திமுக மகளிர் அணியை சேர்ந்த பெண் கேள்வி எழுப்பியதை சுட்டிக்காட்டி உள்ளார்.
கோவையில் குண்டு வைத்த முஸ்லிம் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று சிறைச்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
0
0