கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்… தமிழகம் முழுவதும் என்ஐஏ சோதனை ; மேலும் 4 பேர் கைது

Author: Babu Lakshmanan
11 February 2024, 7:58 pm

கோவை கார் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தின் வழக்கில் ஜமேசா முபின் என்ற ஏ1 குற்றவாளி உடல் கருகி உயிரிழந்தார்.

இது குறித்து NIA அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே இன்று தமிழகம் முழுக்க என்.ஐ.ஏ. சோதனை மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தின் 21 இடங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ. சோதனையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஆறு மடிக்கணினிகள், 25 செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?