மாடியில் இருந்து திடீரென குதித்து கல்லூரி மாணவி தற்கொலை… கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!!!

Author: Babu Lakshmanan
2 May 2024, 11:40 am

கோவை ; கோவையில் தனியார் கல்லூரி நான்காவது தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் KGISL என்ற தனியார் செவிலியர் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பபிஷா(18) என்ற மாணவி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

மேலும் படிக்க: ‘விரைவில் உண்மை வெல்லும்’… ஆபாச பட விவகாரம்… முதல்முறையாக மவுனம் கலைத்த பிரஜ்வல் ரேவண்ணா..!!!

இந்நிலையில் நேற்று காலை கல்லூரி விடுதி கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். கீழே குதித்ததில் படுகாயமடைந்த மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவி உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியிலும், நண்பர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!