கோவையில் ஒரே நாளில் இத்தனை பேர் குணமா! பாதிப்பை முந்திய ‘டிஸ்சார்ஜ்‘ எண்ணிக்கை!!

Author: Udayachandran
8 October 2020, 8:03 pm
Cbe Corona - Updatenews360
Quick Share

கோவை : கோவை மாவட்டத்தில் இன்று 448 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. .

கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு தொடர்பாக மாநில சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியிலில் கோவையில் பீளமேடு, கணபதி, ராமநாதபுரம், சிங்காநல்லூர், வடவள்ளி, குனியமுத்தூர், சரவணம்பட்டி, உக்கடம், சூலூர், பொள்ளாச்சி, காரமடை, மேட்டுப்பாளையம், ரத்தினபுரி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 448 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 933 ஆக உயர்ந்துள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 31 வயது பெண், 66, 76 வயது முதியவர்கள் சேர்த்து 3 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். கோவையில் இதுவரை 479 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 628 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 30 ஆயிரத்து 690 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 4 ஆயிரத்து 764 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Views: - 59

0

0