கோவையில் கொரோனா தொற்றுக்கு 11 பேர் பலி : இதுவரை பலியானோர் எண்ணிக்கை 95ஆக அதிகரிப்பு!
3 August 2020, 7:44 pmகோவை : கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா நோய்த் தொற்றுக்கு 11 பேர் பலியாகினர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது.
கோவை, கணபதி புதூரை சேர்ந்த 55 வயது ஆண் கடந்த ஜூலை 27 ஆம் தேதி கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கடந்த ஜூலை 20 ஆம் தேதியில் இருந்து சிகிச்சைப் பெற்று வந்த ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த 70 வயது முத்தியவரும் இண்று அதிகாலை உயிரிழந்தார்.
அதேபோல கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த ராம்நகரை சேர்ந்த 75 வயது மூதாட்டி, வீரகேரளத்தை சேர்ந்த 61 வயது முதியவர், சரவணம்பட்டியைச் சேர்ந்த 72 வயது முதியவர், வடவள்ளி இ.பி. காலனியை சேர்ந்த 70 வயது முதியவர், எஸ்.எஸ்.குளத்தை சேர்ந்த 65 வயது முதியவர், மலுமிச்சம்பட்டியை சேர்ந்த 62 வயது முதியவர், சுக்கிரவார்பேட்டையை சேர்ந்த 58 வயது ஆண், ரங்கநாதபுரத்தை சேர்ந்த 75 வயது முதியவர் மற்றும் சின்னவேடம்பட்டியை சேர்ந்த 40 வயது பெண் ஆகியோர் இண்று உயிரிழந்தனர். கோவையில் ஒரே நாளில் 2 பெண்கள் உள்பட 11 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை 70 ஆண்கள், 25 பெண்கள் சேர்த்து மொத்தம் 95 பேர் உயிரிழந்துள்ளனர்.