கோவையில் இன்று 550 பேருக்கு கொரோனா!! குணமடைவோர் எண்ணிக்கை உயர்வு!!

Author: Udayachandran
1 October 2020, 7:08 pm
MLA Corona- updatenews360
Quick Share

கோவை : கோவையில் இன்று 550 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து கோவையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரத்து 620ஆக அதிகரித்துள்ளது.

கோவையில் நேற்று முன்தினம் 572 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், நேற்று 574 பேருக்கு தொற்று பாதிப்பு கணடறியப்பட்டது. இந்த நிலையில், வைரசின் தாக்கம் சற்றே குறைந்த இன்று 550 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32ஆயிரத்து 620ஆக உயர்ந்துள்ளது.

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 8 பேர் இன்று சிகிச்சை பலனின்றி பலியாகினர். இதுவரை கோவையில் 444 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், இன்று 511 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் இதுவரை 27 ஆயிரத்து 116 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 5 ஆயிரத்து 60 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 46

0

0