கோவையில் 574 பேருக்கு கொரோனா உறுதி : 11 பேர் உயிரிழப்பு!!

30 September 2020, 7:15 pm
Cbe Corona - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் இன்று ஒரே நாளில் 574 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மேலும் 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் நேற்று 572 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று மேலும் 574 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32ஆயிரத்து 068ஆக உயர்ந்துள்ளது.

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 11 பேர் இன்று சிகிச்சை பலனின்றி பலியாகினர். கோவையில் 50வயதுக்கு மேற்பட்டவர்களே பலியாகி வந்த நிலையில் நீண்ட நாட்களுகு பிறகு நேற்று 33 வயது இளைஞர் ஒருவர் பலியாகினார். இதுவரை கோவையில் 436 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், இன்று 697 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் இதுவரை 26 ஆயிரத்து 605 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 5 ஆயிரத்து 27 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 6

0

0