கோவையில் 4 போலீஸார் உள்பட 190 பேருக்கு கொரோனா உறுதி

6 August 2020, 7:41 pm
corona virus new - updatenews360
Quick Share

கோவை: கோவையில் காவல்துறையினர் 4 பேர் உட்பட 190 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை, குனியமுத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் 39 வயது ஆண் காவலருக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். இங்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குனியமுத்தூர் காவல் நிலையம் கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தப்பட்டு தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது.தவிர பி.ஆர்.எஸ். காவலர் குடியிருப்பை சேர்ந்த தலா 26, 27 வயது காவலர்கள், புறநகர் பகுதியை சேர்ந்த 54 வயது பெண் காவலர், வெள்ளலூர் அதி விரைவுப் படையை சேர்ந்த 48 வயது வீரர் ஆகியோருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர செல்வபுரத்தை சேர்ந்த 28 பேருக்கும், குனியமுத்தூரை சேர்ந்த 11 பெருக்கும், பி.என்.புதூரை சேர்ந்த 9 பேருக்கும், கணபதியை சேர்ந்த 8 பேருக்கும், வடவள்ளியை சேர்ந்த 5 பேருக்கும் ஆர்.எஸ்.புரம், சித்தாபுதூரை சேர்ந்த தலா 4 பேர் உள்பட 190 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 997 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ரத்தினபுரியை சேர்ந்த 75 வயது மூதாட்டி இன்று பலியாகியுள்ளார்.

Views: - 8

0

0