தூய்மை பணிகளை நேரடி ஆய்வு செய்த கோவை மாநகராட்சி ஆணையர்!!

26 September 2020, 12:32 pm
Cbe corp Commissioner - updatenews360
Quick Share

கோவை : கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் கிருஷ்ணசாமி சாலையில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் கிருஷ்ணசாமி சாலையில் நடைபெற்றுவரும் தூய்மைப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கிருஷ்ணசாமி சாலையின் இருபுறங்களிலும் உள்ள புற்கள், குப்பைகள் மற்றும் தேவையற்ற மண் ஆகியவற்றை தூய்மை பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தி அவற்றை வாகனங்கள் மூலம் ஏற்றிச் செல்லும் பணிகளை பார்வையிட்ட ஆணையர், சாலைகளில் குப்பைகளை கொட்ட கூடாது குப்பைத் தொட்டிகளில் மட்டுமே குப்பைகளை கொட்ட வேண்டும் என அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும் என தொடர்புடைய அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது மண்டல உதவி ஆணையாளர் மகேஷ்கனகராஜ், செயற்பொறியாளர் சசிப்பிரியா, உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி உதவி பொறியாளர் கமலக்கண்ணன், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.