கோவையில் செப்.,1 முதல் நீதிமன்றம் திறக்க அனுமதி!!

30 August 2020, 7:37 pm
cbe Court Close - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் 1-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதமாக கோர்ட்டுகளில் நேரடி விசாரணை நடைபெறவில்லை முக்கிய வழக்குகள் காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்தப்படுகிறது.

ஜாமீன், முன்ஜாமீன் மனுக்கள் ஆன்லைனில் தாக்கல் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஐகோர்ட் உத்தரவின்பேரில் நீதிமன்ற விசாரணையில் சில தளர்வுகளை மாவட்ட நீதித்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கோர்ட்டிலும் வருகிற 1-ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடைபெற உள்ளது. தினசரி 7 வழக்குகள் மட்டும் நேரடியாக விசாரிக்கப்படுகிறது. ஜாமீன் முன்ஜாமீன் மனுக்கள் ஆகியவற்றுக்கு தற்போதுள்ள நடைமுறை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 1

0

0