கோவை தினம் – ஐ லவ் கோவை கொண்டாட்டம்

24 November 2020, 7:57 pm
Quick Share

கோவை: கோவை தினத்தை முன்னிட்டு உக்கடம் பெரியகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள “ஐ லவ் கோவை” என்ற செல்பி கார்னரில் பொதுமக்கள் செல்பி எடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கோவை மாவட்டத்தின் 216 வது பிறந்த நாள் விழா இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வந்தது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவை உக்கடம் பெரியகுளம் பகுதியில் அமைக்கப்பட்ட ‘ஐ லவ் கோவை’ என்ற செல்பி கார்னர் பகுதியில் லேசர் வடிவில் கோவையின் சிறப்பம்சங்கள் குறித்த வீடியோ தொகுப்பு வெளியிடப்பட்டது.

Views: - 32

0

0