இக்கட்டான சூழ்நிலையிலும் இடைவிடாது சேவையாற்றும் நல்லறம்..!

1 July 2020, 3:02 pm
Cbe Nallaram Foundation -Updatenews360-Recovered
Quick Share

கோவை : கோவையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் பணியில் நல்லறம் அறக்கட்டளையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரானா வைரஸ் தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், பாதிப்புக்குள்ளான பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் எந்த கடைகளும் செயல்பட அனுமதி இல்லை என்ற நிலையில், கோவை செல்வபுரம் 76 வது வார்டுக்குட்பட்ட சி.ஜி.வி நகரை சேர்ந்தவருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால் அப்பகுதி கொரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பொதுமக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இதனை அறிந்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவுறுத்தலின் பேரில், நல்லறம் அறக்கட்டளையின்  தலைவர்  எஸ்.பி.அன்பரசன் வழிகாட்டுதலின் படி, அந்த  அறக்கட்டளையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், எஸ்.ஆர்.குமார் தலைமையில் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள 50 குடும்பங்களுக்கு  அரிசி ,சக்கரை, சமையல் எண்ணை உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கி நிவாரண தொகுப்புகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், முருகவேல்,்ஆவின் முத்து,்சீனிவாசன் ராஜேந்திரன், கீர்த்தி மகேந்திரன், நல்லறம் அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கட்டான சூழலில், அத்தியாவசிய பொருட்களை வழங்கியமைக்காக 76 வது வார்டு  பொதுமக்கள் நல்லறம் அறக்கட்டளையினருக்கு நன்றி தெரிவித்தனர்.