கோவையில் வாக்காளர்களுக்கு ஹாட் பாக்ஸ் விநியோகம்… திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
15 February 2022, 9:25 am

கோவையில் வாக்காளர்களுக்கு ஹாட் பாக்ஸ் வழங்கிய திமுகவினர் நடவடிக்கை எடுக்க அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். நாளுக்கு நாள் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவரும் விதத்தில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வாக்கு சேகரித்து வருகின்றனர். 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை தெலுங்குபாளையம் 71 ஆவது வார்டு பகுதியில் ஒரு சிலர் வாகனங்களில் ஹாட் பாக்ஸில் வைத்து கொண்டு வீடு வீடாக வழங்குவதாக அதிமுக வேட்பாளர் கருப்பசாமிக்கு தகவல் கிடைத்தது. உடனே கருப்புசாமி அதிமுகவினருடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு ஹாட் பாக்ஸை வாக்காளர்களுக்கு விநியோகித்து கொண்டிருந்ததது தொடர்பாக அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு கொரோனா நிவாரண நிதி என அவர்கள் பதிலளித்தனர். உடனே அவர்கள் தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் தெரிவித்தனர். இதையறிந்த அவர்கள் அந்த ஹாட் பாக்சை அங்கேயே விட்டுவிட்டு சென்று விட்டனர்.

இதுகுறித்து பறக்கும் படை அதிகாரிகளுக்கும், அதிமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நீங்கள் முறையான நடவடிக்கை எடுக்க இல்லையென்றால் நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என அதிமுகவினர் தெரிவித்தனர். தொடர்ந்து அதிகாரிகள் ஹாட் பாக்ஸ் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?