கோவை அதிமுகவில் இணைந்த திமுக முக்கிய நிர்வாகிகள் : அதிர்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள்..!!

26 November 2020, 9:04 pm
cbe admk - updatenews360
Quick Share

கோவை : கோவை மாவட்ட திமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள் சிலர், அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சியின் நிர்வாகிகள் கட்சி மாறுவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில், கோவை மாவட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் சிலர் திமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்துள்ளனர்.

கோவை வடவள்ளி எம்ஜிஆர் மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண் குமார் மற்றும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் Er.R. சந்திரசேகர் முன்னிலையில், திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரபு, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சதீஷ் மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கோவையில் முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்திருப்பது மாவட்ட திமுக தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.