கோவை திமுக பிரமுகர் வீட்டில் ஐடி ரெய்டு… ஒன்றரை மணிநேரம் நடந்த சோதனையால் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
15 April 2024, 8:27 pm
Quick Share

மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

கோவை சிவானந்தா காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையானது 3 கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீனா லோகு இல்லத்தில் சோதனை நடத்தினர்.

மேலும் படிக்க: விஷாலை அரசியலில் இயக்கப் போவது யார்…? விஜய் கட்சியை பலவீனப்படுத்த அவதாரம்!

சுமார் ஒன்றரை மணி நேரம் சோதனை நடத்திய நிலையில் வீட்டில் இருந்து எந்த பொருட்களும் கைபற்றப்பட வில்லை வீட்டில் இருந்த கார், அலுவலகம்,வீடு என அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

வாக்காளர்களுக்கு பணபட்டுவா செய்ய வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. சோதனை நடத்திய நிலையில் வீட்டில் இருந்து எந்த பொருட்களும் கைப்பற்றப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 115

0

0