‘மோடி ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டத்தை நிறுத்திடுவாரு’… திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பகீர்..!!

Author: Babu Lakshmanan
15 April 2024, 7:55 pm
Quick Share

பிரதமர் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் எரிவாயு சிலிண்டரின் விலை 2000 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் கதிர் ஆனந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வீதி வீதியாக, தெரு தெருவாக சென்று, வியாபாரிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடையும் வாக்குகளை சேகரித்து வருகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

பிரச்சாரத்தில் தீவிரமாக மோடி அரசை கடுமையாக விமர்சித்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் பத்தலபல்லி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு அவர் பேசியதாவது :- 10 ஆண்டுகளுக்கு முன் 400 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை தற்போது 1200 ரூபாயாக உயர்ந்துள்ளது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் எரிவாயு சிலிண்டரின் விலை 2000 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: நாங்க நினைத்திருந்தால் மோடி ஜெயிலில் இருந்திருப்பாரு ; ஆனால்… ப.சிதம்பரம் சொன்ன ரகசியம்!!

அதே போல தங்கத்தின் விலை தற்போது கால் லட்சத்தைத் தாண்டியுள்ளது. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தையும் நிறுத்தி விடுவார். அதனால் பிரதமர் மோடி ஆட்சி தொடரவே கூடாது, என கேட்டுக் கொண்டார்.

Views: - 372

0

0