அரைமணி நேரம் வானில் வட்டமடித்த விமானம்.. திருச்சியை தொடர்ந்து கோவையில தத்தளித்த பயணிகள்.!!
Author: Udayachandran RadhaKrishnan12 அக்டோபர் 2024, 1:09 மணி
திருச்சியை தொடர்ந்து கோவையில் அரைமணி நேரம் வட்டமடித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
துபாயிலிருந்து கோழிக்கோடு புறப்பட்ட ஃப்ளை துபாய் விமானம், மோசமான வானிலையில் தரையிறங்க முடியாத நிலையில் ஏற்பட்டது.
வானிலை சீராகும் என்று அரை மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம், கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
விமானம் அரை மணி நேரமாக வானில் வட்டமடித்தபடி இருந்ததால் பயணிகள் பீதியடைந்தனர். ஏற்கனவே திருச்சியில் ஏர் இந்தியா விமானத்தில் தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்டு அந்த விமானம் 2 மணி நேரம் வானில் வட்டமடித்தது.
இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்த நிலையில், மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
Views: - 250
0
0