பெரியகுளத்தில் மின் இணைப்பு முன்னோட்டம் பார்க்கும் இறுதிகட்டப் பணி : கோவை – உக்கடம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்!!

Author: Babu Lakshmanan
20 August 2022, 11:16 am

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மின் இணைப்பு கொடுத்து முன்னோட்டம் பார்க்கும் இறுதி கட்டப்பணிகள் நடந்து வரும் நிலையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை உக்கடம் – ஆத்துப்பாலம் உயர் மட்ட மேம்பாலம் கட்டும் பணி, முழு வீச்சில் நடந்து வருகிறது. உக்கடம் பேருந்து நிலையம் சந்திப்பு அருகே, 110 கிலோ வோல்ட் உயர் அழுத்த மின் கம்பிகள் இருப்பது, பாலம் கட்டும் பணிக்கு இடையூறாக இருந்தது.

இதற்கு தீர்வு காணும் வகையில், பேருந்து நிலையம் சந்திப்பில் இருந்து துணை மின் நிலையம் வரை, சாலையை தோண்டி, ஐந்தடி ஆழத்தில் மின் கம்பிகள் பதிக்கப்பட்டன. மின் இணைப்பு கொடுத்து முன்னோட்டம் பார்க்கும் இறுதி கட்டப்பணி இன்று நடைபெற்று வருகிறது.

முன்னதாக, இன்று அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு துவங்கிய இந்த பணி மாலை 5 மணி வரை மணி வரை நடக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியின் பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உக்கடம் முதல் பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை செல்லும் வாகனங்கள் பேரூர் புறவழிச்சாலை, புட்டுவிக்கி, சுண்ணாம்பு காளவாய் வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி சாலையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இரு சக்கர வாகனம் மட்டும் செல்ல சிறு பாதை மட்டும் விடப்பட்டுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!