ஊடுபயிராக கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது : நான்கரை கிலோ கஞ்சா பறிமுதல்

Author: kavin kumar
2 February 2022, 9:09 pm
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் அருகே வாழைத் தோட்டத்தினுள் சட்டவிரோதமாக ஊடுபயிராக கஞ்சா செடி வளர்த்து வந்த விவசாயியை போலீசார் கைது செய்துள்ளனர்..

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீளியூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் இவருக்கு சொந்த விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா செடி வளர்ப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற காரமடை ஆய்வாளர் குமார் மற்றும் காவலர்கள் சம்பத்தின் தோட்டத்தினை சோதனை செய்தனர்.

அப்போது சட்டவிரோதமாக தோட்டத்தின் ஒரு பகுதியில் ரகசியமாக கஞ்சா செடி வளர்த்தது தெரியவந்தது. இதனையடுத்து சம்பத்குமாரை கைது செய்த போலீசார் அவர் வளர்த்து வந்த மூன்று கிலோ கஞ்சா செடி மற்றும் விற்பனைக்கு வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சா என மொத்தம் நான்கரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து வினோத் மீது வழக்கு பதிவு செய்த காரமடை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 719

0

0