கோவை நகைக்கடை கொள்ளை… குற்றவாளியின் மனைவியை தொடர்ந்து மாமியார் கைது ; குடும்பத்தோடு போட்ட சதித்திட்டம்!

Author: Babu Lakshmanan
4 December 2023, 11:59 am

ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை வழக்கில் விஜயின் மாமியார் கைது செய்யப்பட்டு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர பகுதியில் வழிப்பறி மற்றும் திருடுபோன செல்போன்களை கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு போத்தனூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது.

இதில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு, காணாமல் போன செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

இதனை தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- கோவை போத்தனூர் சரகத்திற்கு உட்பட்ட மூன்று காவல் நிலைய எல்லைகளில் பொதுமக்கள் தவறவிட்ட 57 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாய்ஸ் மற்றும் கேல்ஸ் கிளப்புகளுக்கான போட்டிகள் நடைபெற உள்ளது. புகையிலையில்லா மாவட்டம் என்ற இலக்கில் அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து பணிகளை தீவிரபடுத்தியுள்ளோம். இதுவரை மாநகர பகுதியில் 20க்கும் மேற்பட்ட கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டு கடையின் வணிக உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகர் முழுவதும் கண்காணிப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை வழக்கில் தேடப்படும் விஜய்யின் மாமியர் யோகராணியை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடமிருந்தும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.

  • sivakumar broke karthi and tamannaah love life தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!