மீண்டும் பரவும் கொரோனா : கோவையில் காவலருக்கு தொற்று உறுதி.. சக காவலர்களுக்கும் பரிசோதனை!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2021, 5:25 pm
Police Corona -Updatenews360
Quick Share

கோவை : சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலையில் கோவை மாவட்டம் மிக அதிக பாதிப்புகளை சந்தித்து. முறையான திட்டமிடல் இல்லாமல் இரண்டாம் அலையை அரசு கையாண்டதே இதற்கு காரணம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இதனிடையே மாவட்டத்தில் தினமும் சராசரியாக 200 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மூன்றாம் அறையின் துவக்கமோ? என்று மக்கள் அச்சப்பட சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இன்று முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொண்ட காவலர் இன்று வழக்கம் போல் காவல் நிலையம் வந்துள்ளார்.

அப்பொழுது பரிசோதனை முடிவுகள் கிடைத்ததன் பேரில் தனக்கு கொரோனா தொற்று இருப்பது காவலருக்கு தெரிந்துள்ளது. இந்த நிலையில், அவர் பயன்படுத்திய ரோந்து வாகனம் மற்றும் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப் பட்டுள்ளது.

கோவையில் போலீஸ் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அனைத்து போலீசாருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை போலீசார் மத்தியில் எழுந்துள்ளது.

Views: - 295

0

0