வழிப்பறி கொள்ளையன் பலி : ஓடும் ரயிலில் அடிபட்டு இறந்த பரிதாபம்!!

14 September 2020, 2:43 pm
train Dead - updatenews360
Quick Share

கோவை : பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் ரயில்வே தண்டவாளத்தில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை ப்ரூக் பாண்ட் ரூட் பகுதியிலுள்ள ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்த கிடந்த வாலிபர் ரத்தினபுரி சங்கனூர் எஸ்.பி காலனி இப்பகுதியைச் சேர்ந்த 24 வயது வாலிபர் என்பது தெரியவந்தது. மேலும் இவர் மீது ரத்னபுரி காற்று சாய்பாபா காலனி ஆகிய போலீஸ் நிலையங்களில் பல திருட்டு கொள்ளை வழக்குகள் உள்ளது.

மேலும் ரெயில்வே போலீஸ் நிலையத்திலும் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளது தெரியவந்தது இதுகுறித்து ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து பொன் சிங்கம் ஓடும் ரயிலில் திருட்டில் ஈடுபட்ட போது அடிபட்டு இறந்தாரா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்

Views: - 7

0

0