கோவையில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை மூடல்.!!

17 August 2020, 11:05 am
Cbe Scent Factory Closed - Updatenews360
Quick Share

கோவை : காரமடை அருகே தனியார் சென்ட் தொழிற்சாலையில் பணிபுரிந்த 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தொழிற்சாலையை மூட சுகாதாரத்துறையினர் உத்தரவிட்டனர்.

கோவை மாவட்டம் காரமடை அருகே மருதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தனியார் சென்ட் பேக்டரி செயல்பட்டு வருகிறது. கேரளா மாநிலத்தை சேர்ந்த பலர் அங்கு தங்கி பணிபுரிந்து வருகின்றனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த நிறுவனத்தை மூன்று தினங்களுக்கு மூட சுகாதாரத்துறையினர் உத்தரவிட்டு இருந்தனர். மேலும் நேற்று முன்தினம் அதே நிறுவனத்தில் மூன்று பேருக்கு உறுதி செய்யப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை அன்று 17 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நேற்றைய தினம் முடிவுகள் வெளியானது.

இதில் கேரளா மாநிலத்தை சேர்ந்த 6 பேர் மற்றும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒருவர் ஆகியோருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. மருதூர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தவர்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதி எனவும் அறிவித்துள்ளனர்.

அங்கு பணிபுரியும் 150-க்கும் மேற்பட்டோருக்கு இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட உள்ளது. அந்த நிறுவனத்தை தற்காலிகமாக மூட வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் குமார் உத்தரவிட்டுள்ளர். சம்பந்தப்பட்ட இடத்தில் நேற்று வட்டாட்சியர் சாந்தாமணி ஆய்வு செய்தார்.