வாக்கு இயந்திரம் இருக்கும் STRONG ROOM அருகே வந்து நின்ற கார்… ரவுண்டு கட்டிய முகவர்கள்.. கோவையில் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
22 April 2024, 5:05 pm

கோவையில் Strong Room அருகே திடீரென கார் சென்ற நிலையில், அதிகாரிகளுடன் முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கடந்த 19ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. கோவை நாடாளுமன்ற தொகுதியிலும் தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் Strong Roomல் வைக்கப்பட்டு அந்த அறை அடைக்கப்பட்டு உள்ளது.

மேலும், அங்கு மூன்று அடுக்கு பாதுகாப்புகள், சி.சி.டி.வி கேமராக்கள் அனைத்தும் பொருத்தப்பட்டு பாதுகாப்பு பணிகளானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அங்கு வேட்பாளர்களின் முகவர்களும் உள்ளனர்.

மேலும் படிக்க: அவன அடிச்சு கொல்லுங்கடா..? அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது கொலைவெறி தாக்குதல் ; 6 பேர் கைது

Strong Room அருகே யாரும் செல்லக் கூடாது என்று கூறப்பட்டு உள்ள நிலையில், இன்று காலை தனியார் வாகனம் ஒன்று Strong Room அருகே சென்று உள்ளது. இதனைப் பார்த்த முகவர்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர். அப்போது, அந்த கார் பணிபுரியும் பேராசிரியரின் கார் என தெரிய வந்தது.

இந்தப் பகுதியில் யாரும் வரக் கூடாது, வேட்பாளர்கள் கூட அவர்களின் காரில் வரக் கூடாது என்று கூறப்பட்டு உள்ள நிலையில், எவ்வாறு இதனை அனுமதித்தார்கள் என்று கூறி முகவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கே சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி முகவர்களை சமாதானப்படி காரை அனுப்பி வைத்தனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!