அவன அடிச்சு கொல்லுங்கடா..? அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது கொலைவெறி தாக்குதல் ; 6 பேர் கைது

Author: Babu Lakshmanan
22 April 2024, 4:50 pm
Quick Share

தஞ்சை ; தஞ்சையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை – கும்பகோணம் அருகே உள்ள பாலக்கரை பகுதியில், பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் ரமேஷ் என்பவர் ஓட்டுநராகவும், செந்தில் குமார் என்பவர் நடத்துநராகவும் இருந்தனர்.

பாலக்கரை அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது, சில இளைஞர்கள் தங்களின் பைக்கை நிறுத்தி விட்டு, அங்கு நின்று கொண்டிருந்தனர். இதனால், ஓட்டுநர் ரமேஷ் பேருந்தை ஒதுக்கிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது, அவர்கள் மீது பேருந்து லேசாக உரசியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், பேருந்துக்குள் ஏறி ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர்.

மேலும், பேருந்தில் இருந்து எட்டி உதைத்து ஓட்டுநர் ரமேஷை வெளியே தள்ளி, கும்பலாக சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது, அந்த வழியே சென்று கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இதனை வீடியோ எடுத்துள்ளனர். அவர்களையும் அந்த கும்பல் தாக்க முயன்றுள்ளது.

மேலும் படிக்க: 3 ஆண்டுகள் கோட்டை விட்டாச்சு.. இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கல ; திமுக அரசுக்கு மீது அண்ணாமலை பய்ச்சல்!!

இதையடுத்து, தாக்குதலில் காயமடைந்த ஓட்டுநர் ரமேஷ் மற்றும் நடத்துநர் செந்தில் குமார் உள்பட 4 பேர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, தாக்கிவிட்டு தப்ப முயன்ற 2 இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். எஞ்சியவர்களை தேடி வந்த நிலையில், உதயகுமார் (25), கார்த்திகேயன் (21), மாரிமுத்து (18) ஆகியோரையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • Thirumavalavan கூட்டணி ஆட்சியில் பங்கு வேண்டும்.. திமுக ஆட்சிக்கு செக் வைக்கும் திருமா? 2 முறை வீடியோவை DELETE செய்ததால் பரபர!
  • Views: - 249

    0

    0