கோவையில் ஜன.31ம் தேதி வரை அரசியல் கூட்டங்களுக்கு தடை: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு..!!

Author: Rajesh
28 January 2022, 12:51 pm
Quick Share

கோவையில் ஜனவரி 31 ஆம் தேதி வரை பிரச்சாரங்கள் மற்றும் தேர்தலுக்காக அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கபடுவதாக கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் கோவிட் தடுப்பு முறைகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இன்று நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கொரோனா முன்னேச்சரிக்கை நடவடிகைகள் குறித்தும் பல்வேறு தேர்தல் கட்டுபாடுகள் மற்றும் தேர்தல் நெறிமுறைகள் குறித்தும் கோவை மாநகராட்சி ஆணயாளர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெளிவுறை வழங்கினார்.

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இன்று நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அவர் கூறியதாவது, தேர்தல் நேர்பார்வையாளர் விரைவில் நியமிக்கப்படுவார். நேற்று காணோளி மூலம் நடந்தப்பட்ட கலந்துரையாடலில் கொரோனா முன்னேச்சரிக்கை நடவடிகைகள் குறித்து தெளிவுரை வழங்கப்பட்டது.

வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள் 2 வாகனங்களுடன் மட்டுமே மையங்களுக்கு வருவதற்கே அனுமதிக்கப்படுவர் என்றும், ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கபடுவார். ஒருவருக்கு பின் ஒருவராகவே அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், ஜனவரி 31 ஆம் தேதி வரை பிரச்சாரங்கள் மற்றும் தேர்தலுக்காக அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கபட்டுள்ளது. மேலும் 31ம் தேதிக்கு மேலும் 100 உறுப்பினர்களுடன் மட்டுமே உள்கட்சி கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், பிரச்சாரத்திற்கு செல்லும் வேட்பாளர்கள் அவர்களுடன் இரண்டு நபர்களை அழைத்து செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

தேர்தலில் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கோவிட் முன்னெச்சரிக்கை முறைகளை நாம் எவ்வாறு கையாளுகிறோம் என்பதை உயர் நீதிமன்றம் தீவிரமாகக் கவனித்து வருகிறது என்பதை கவனத்தில் கொண்டு தேர்தலை நாம் நடத்த வேண்டும் என்று கூறினார்.

  • Senthil Balajiகிளைமாக்ஸ்க்கு நெருங்குகிறதா செந்தில் பாலாஜி வழக்கு? நாள் குறிச்சாச்சு… நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்..!!
  • Views: - 2534

    0

    0