கோவை மாவட்ட ஆட்சியருக்கு கோவிட் ‘பாசிடிவ்’: உடன் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை..!!

Author: Rajesh
28 January 2022, 11:57 am
Quick Share

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. நோய் தொற்று பரவல் விகிதம் டிஸ்ஜார்ஜ் செய்யப்படுபவர்களை விட அதிகமாகவே உள்ளது. இதில் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் 90 சதவீதம் பேரை வீட்டுத் தனிமையிலேயே சிகிச்சை பெற்றுக் கொள்ள சுகாதாரத்துறை அனுமதி வழங்கி வருகிறது.

அதன்படி கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 629 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரனுக்கு லேசாக சளி, காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

பரிசோதனை முடிவில் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் வீட்டு தனிமையில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டர். மேலும் மாவட்ட ஆட்சியர் உதவியாளர், அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் என கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தியுள்ளனர்.

Views: - 393

0

0