6 மாதங்களுக்கு பிறகு கோயம்பேடு மொத்த பழ வியாபார கடைகள் திறப்பு..!!

2 November 2020, 10:41 am
koyambedu fruit market - updatenews360
Quick Share

சென்னை: 6 மாதங்களுக்குப் பின்னர் கோயம்பேடு மொத்த பழ வியாபார கடை திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை முக்கிய காரணியாக இருந்ததால், 6 மாதங்களுக்கு முன்னர் மூடப்பட்டது. இதனை தொடர்ந்து காய்கறி சந்தை மட்டும் சமீபத்தில் திறக்கப்பட்டது.

இருப்பினும், மொத்த பழவியாபார கடைகள் திறக்கப்படாமல் இருந்ததால், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனைதொடர்ந்து மொத்த பழவியாபாரிகள், கடை உரிமையாளர்கள் தொடர் கோரிக்கைகளை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு முதல் மொத்த பழ வியாபார கடைகளை திறக்க அனுமதியளிக்கப்பட்டது. இதனால் மொத்த பழ வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Views: - 36

0

0