திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.7 கோடி மோசடி : திமுக பிரமுகரின் மருமகன் மீது கோவை பெண் தொழிலதிபர் புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 July 2021, 11:31 am
Woman Complaint Against DMK -Updatenews360
Quick Share

கோவை : திருமண மோசடி புகாரின் பேரில் திமுக பிரமுகர் கோவை தங்கத்தின் மருமகன் அருண் பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீது கோவை கிழக்கு மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை காளப்பட்டியை சேர்ந்த தொழிலதிபர் சிந்துஜா என்பவர் சென்னை டி.ஜி.பி அலுவலலத்தில் புகார் அளித்தார். அதன்படி, முன்னாள் எம்.எல்.ஏ.,வும் திமுக., பிரமுகரின் மருமகனுமான அருண் பிரகாஷ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி, ரூ.7 கோடி பணம் பறித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து தான் கோவையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க வந்துள்ளதாகவும் சிந்துஜா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அருண் பிரகாஷ் உட்பட மூவர் மீது கோவை கிழக்கு மகளிர் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை மிரட்டல், அச்சுறுத்தல், காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும், சிந்துஜாவும் தனது மருமகனும் ஹோட்டல் தொழில் செய்து வந்ததாகவும் கோவை தங்கம் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மோசடி புகாரின் பேரில் திமுக பிரமுகர் மருமகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 304

0

0