கோவையில் மனைவியை காப்பாற்ற பெண்ணை கொலை செய்த வழக்கு : கணவன் மனைவி உட்பட 3 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு!!

30 November 2020, 2:06 pm
couples Victim- Updatenews360
Quick Share

கோவை : கோவையில் அம்மாசை என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவன் மனைவி உட்பட 3 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது.

கோவையை சேர்ந்த வழக்கறிஞர் ஈ.டி.ராஜவேல் என்பவரின் மனைவி மோகனா , ஓடிசாவில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த நிலையில்இ மோகனா மீது 5 வழக்குகள் தொடுக்கப்பட்டது.

இயைடுத்து இந்த வழக்கில் இரந்து அவரை காப்பாற்ற கணவரும், வழக்கறிஞரமான ஈ.டி.ராஜவேல் முயற்சி செய்துள்ளார். சொத்து விவகாரம் தொடர்பாக தன்னிடம் வந்த அம்மாசை என்ற பெண்ணை தனது உதவியாளர் பொன்ராஜ் உதவியுடன் வழக்கறிஞர் ஈ.டி.ராஜவேல் கொலை செய்தார்.

தனது மனைவி மோகனா உயிரிழந்து விட்டதாக இறந்த அம்மாசையின் உடலை காட்டி அனைவரையும் ஏமாற்றி, மாநகராட்சியில் இறப்பு சான்றிதழ் பெற்றார். இறப்பு சான்றிதழை ஒடிசாவில் காட்டி மனைவி மீதான வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்தார் வழக்கறிஞர் ஈ.டி.ராஜவேல்.

வேறு ஒரு வழக்கு விசாரணையின் போது , அம்மாசை கொலை செய்யப்பட்டது தெரியவரவே, காவல் துறையினர் 2013 ம் ஆண்டு ஈ.டி.ராஜவேலையும், அவரது மனைவியையும் கைது செய்தனர்..
இந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

குற்றம்சாட்டப்பட்ட வழகறிஞர் ஈ.டி.ராஜேவேல், அவரது மனைவி மோகனா, உதவியாளர் பொன்ராஜ் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு அளித்தார். தண்டணை விபரங்கள் மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படுகின்றது.

Views: - 0

0

0