ஆன்லைனில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாததால் மிரட்டல் : வாலிபர் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
26 March 2022, 10:22 am

கோவை: ஆன்லைனில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்த நிறுவனம் மிரட்டல் விடுத்தது. இந்த நிலையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஏத்தகுடியைச் சேர்ந்தவர் பாலகுரு இவரது மகன் பாரதிராஜா (25).இவர் தனது அண்ணன்கள் இருவருடன் சேர்ந்து. கோவை கணபதி வரதராஜுலு நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார்.

ஆன்லைன் ஆப் மூலம் 12 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்த நிலையில், கடன் தொகையை சரியாக செலுத்தாத காரணத்தினால், ஆன்லைன் ஆப் கடன் நிறுவனத்திலிருந்து கடன் தொகையை வசூலிக்க இவரிடம் தொலைபேசியில் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்தலையில், பாரதிராஜா கடன் தொகை வசூலிக்கும் நிறுவனம் கொடுத்த டார்ச்சரால் மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வந்த அவரது அண்ணன் தம்பி தூக்கில் தொங்குவதை கண்டு சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு வந்த சரவணம்பட்டி காவல்துறையினர் பாரதி ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!